62 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக 6 மலேசியர்கள் கம்போடியாவில் கைது

கம்போடியாவில் கிட்டத்தட்ட 62 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக ஆறு மலேசியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புனோம் பென் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஜூலை 16 ஆம் தேதி புனோம் பென் அனைத்துலக விமான நிலையத்தில் நான்கு சூட்கேஸ்களில் அடைக்கப்பட்ட 61.8 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புனோம் பென்னில் இருந்து ஹாங்காங்கிற்கும், பின்னர் லண்டனுக்கும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல இந்த குழு திட்டமிட்டிருந்ததாக அறிக்கை கூறுகிறது. சந்தேக நபர்கள் மீது கம்போடியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் 40 ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பிற சாத்தியமான கூட்டாளிகளை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here