Sejahtera MADANI திட்டம் நாளை தொடக்கம் – பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்,

நாட்டில் பரம ஏழ்மையை ஒழிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, “Sejahtera MADANI” முன்னெடுப்பு நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம், அரசாங்கம் மற்றும் பெருநிறுவனத் துறைகள் இணைந்து பரம ஏழைகள் மற்றும் ஏழை மக்களுக்கு நிலைத்துவமான உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

“பரம ஏழைகளை ஆதப்பது எனது ஆட்சியின் தொடக்க நாளிலிருந்தே முன்னுரிமையாக இருந்தது,” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட சுமார் 150,000 பரம ஏழை குடும்பங்களில் பெரும்பாலானோர் 2024 இறுதிக்குள் அந்தப் பட்டியலில் இருந்து விலகியுள்ளதாகவும், இதுவே இந்தப் புதிய முன்னெடுப்பின் பலத்தை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது என்றும் அவர் நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here