டாம் குரூஸின் ‘மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்’.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். அந்த வகையி, சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது.

இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து 8-வது பாகமான “மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்” படம் சமீபத்தில் வெளியானது. இதில், ஹெய்லி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா பெர்குசன், வனேசா கிர்பி, ஈசாய் மோரல்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கிய இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரேவேற்பை பெற்றது. இந்த நிலையில், மிகவு எதிர்பார்க்கப்பட்ட மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஆக்ஸ்ட் 19ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here