புத்ராஜெயா.
ஜப்பானின் ஓசாகாவில் ஜூலை 21 முதல் 26 வரை நடைபெற்ற “Expo 2025 Osaka “-இன் மலேசியா உயர் கல்வி வாரத்தின் போது, மலேசியா மற்றும் ஜப்பான் இடையே 13 முக்கிய துறைகளில் மொத்தம் 31 ஒப்பந்தங்கள் (MoU/MoA) 11 கல்வி நிறுவனங்களால் கைச்சாத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் மருத்துவம், பொருளியல், இஸ்லாமிய வங்கிகள், கடல் அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்குகின்றன. மாணவர் மற்றும் பேராசிரியர் பரிமாற்றம், தொழில்துறை பயிற்சி, இணைந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி திட்ட மேம்பாடு போன்ற நடவடிக்கைகளும் இதில் இடம்பெறுகின்றன.
நிகழ்வின் ஒரு பகுதியாக, 11 மலேசிய கல்வி நிறுவனங்களும் 20 வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்ற வணிக இணைப்பு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் மூலம் ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற ஒத்துழைப்பு வாய்ப்புகள் ஆராயப்பட்டன.
‘Study in Malaysia’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உலகளாவிய மாணவர்களை மலேசியாவுக்கு வரவேற்கும் நோக்கத்துடன், கல்வி மற்றும் சுற்றுலாவை இணைக்கும் Edutourism திட்டத்தை முன்னிறுத்தியது. 6 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 100,000-க்கும் மேற்பட்டவர்கள் e Malaysia
Pavilionனை பார்வையிட்டனர்.




















