ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது கொடூர தாக்குதல் – அதிர்ச்சி சம்பவம்

கான்பரா,ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இந்தியரான சவுரவ் ஆனந்த் (வயது 33) வசித்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி மெல்போர்னின் அல்டோனா பகுதியில் மருந்தகத்திற்கு சென்று வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவரை இடைமறிந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் கொடூரமாக தாக்கினர். கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களை கொண்டு ஆனந்தை தாக்கியுள்ளனர். ஆனந்தின் கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளை கத்தியால் வெட்டியுள்ளனர். பின்னர், அவரிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சிறுவர்கள் கத்தியால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆனந்தை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்களை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here