‘கிங்டம்’ படத்துக்குச் சீமான் கண்டனம்

சென்னை: 

இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் திரையிட்டால் திரையரங்கை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அண்மையில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களைக் குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என ‘கிங்டம்’ திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத் திரிபாகும். இது மிகப் பெரும் மோசடி.

“வரலாற்றில் ஒரு நாளும் நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டி, இலங்கைத் தமிழர்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும்  கண்டனத்துக்குரியது,” என்றார் சீமான்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படம் ஜூலை 31ஆம் தேதி வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here