சூப்பர் மார்க்கெட்டில் திருடிய வியட்நாம் நபர் – 11 மாதக் குழந்தையை பணயமாக வைத்து தப்பிக்க முயற்சி

பட்டர்வொர்த்,

சூப்பர் மார்க்கெட்டில் கடல் உணவுப் பொருட்களை திருடிய வியட்நாம் நபர், தப்பிச் செல்லும் முயற்சியில் 11 மாதக் குழந்தையை பணயமாக வைத்து தப்பிக்க முயன்ற சம்பவம் இன்று Jalan Telaga Air பகுதியில் நடந்தது.

மதியம் 12.45 மணியளவில், அந்த நபர் எடை போடப்பட்ட கடல் உணவுகளை பணம் செலுத்தாமல் எடுத்துச் செல்ல முயற்சித்ததை சூப்பர் மார்க்கெட் மேற்பார்வையாளர் ஒருவர் கண்டதாக, செபராங் பிறை உத்தாரா (SPU) மாவட்ட போலீஸ் தலைவர் Anuar Abd Rahman கூறினார் .

மேற்பார்வையாளர் அவரை பிடித்தபோதும், சந்தேகநபர் தப்பியோடினார். பின்னர், மீண்டும் பிடிக்க முயன்றபோது, அந்த நபர் ஒரு குடும்பத்துடன் இருந்த 11 மாத ஆண் குழந்தையை இழுத்து பிடித்து, கத்தியால் அச்சுறுத்தியதாகவும், அங்கு இருந்த பொதுமக்களையும் குறிவைத்து அச்சுறுத்தியதாகவும் கூறினார்.

அங்கு இருந்த சூப்பர் மார்க்கெட் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், 30 வயதிற்கும் மேற்பட்ட அந்த சந்தேகநபர் கட்டுப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் போலீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு, கட்டடத்திற்குள் திருட்டு, காயம் ஏற்படுத்தல், மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் (பகுதி 380, 324 மற்றும் 506, குற்றச் சட்டம்) விசாரிக்கப்படுகிறது.

முன்பு, சமூக வலைத்தளங்களில் பரவிய பல வீடியோக்களில், கத்தி மற்றும் பிளாஸ்டிக் பையை ஏந்திய வெளிநாட்டு நபர், குழந்தையை கடத்த முயன்ற பரபரப்பான காட்சிகள் பதிவாகியிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here