டிரம்ப்-புதின் சந்திப்பு – உக்ரைன் போர் நிறுத்தத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

அலாஸ்கா,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக 3 மணி நேரம் நடைபெற்றாலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் உள்ள எல்மென்டார்ப் – ரிச்சர்ட்சன் கூட்டுப் ராணுவ தளத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், புதின் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு தனி விமானத்தில் வந்து, சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார். அவரை டிரம்ப் நேரில் வரவேற்று கைகுலுக்கி சந்தித்தார்.

சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, டிரம்ப் கூறியதாவது:
“ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை, இருப்பினும் பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது.”

புதின் கூறியதாவது:
“நம்மிடையே நடந்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் மற்றும் நான் வெளிப்படையாக பேசினோம். போர் தொடராத நிலையை உருவாக்க வேண்டியதற்காக உக்ரைனில் அமைதி ஏற்படும் என்று நம்புகிறேன். அமெரிக்கா-ரஷ்யா இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் மாஸ்கோவில் நடைபெறும்.”

மேலும், டிரம்ப் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பல முறை தொலைபேசி மற்றும் நேரடி சந்திப்புகளில் முயற்சி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here