சமயத் தொண்டர் லீலாவதியின் 90ஆவது பிறந்த நாள்: ருத்ரா தேவி சமாஜத்தில் கொண்டாடப்பட்டது

சமயத்திற்கான தொண்டாற்றுபவர்களை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்வோம். அந்த வகையில்   40 ஆண்டுகளுக்கு மேலாக  ருத்ராதேவி சமாஜத்துடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் திருமதி லீலாவதியின் பிறந்த நாள் மிகவும் விமரிசையான முறையில் சமாஜத்தில் கொண்டாடப்பட்டது.

இவரின் பிறந்த நாளில் இவரின் சேவைக் குறித்து பலர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ருத்ரா தேவி சமாஜத்தின் ஸ்தாபகர் சங்கரத்னா ப.சுப்பிரமணியன் கூறுகையில் சமாஜத்திற்கு அவர் சேவையாற்ற வரும்போதே தேவாரம், பஜன் ஆகியவற்றை கற்று தேர்ந்திருந்தார். தான் கற்ற சமயக் கல்வியை மாணவர்களுக்கு போதித்தோடு சமாஜத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்பவர் என்றால் அது திருமதி லீலாவதி என்று சொல்லலாம். அவர் இன்று போல் என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் அவா.

கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் ருத்ரா தேவி சமாஜத்தின் தலைவருமான குணராஜ் ஜார்ஜ் தமதுரையில் திருமதி லீலாவதியை எனக்கு தெரிந்த காலம் தொட்டே சமயத்தின் மேல் அதிக பற்றுள்ளவராகவும் அதே வேளை மிகவும் கண்டிப்பானவராகவும் இருப்பவர். தவறு யார் செய்தாலும் அதனை மென்மையான முறையில் கண்டித்து அறிவுரை வழங்குவார். கண்டிப்பு ஒருபுறம் இருந்தாலும் சிறந்தவற்றை மனமுகந்து பாராட்டுவார். அவர் சமாஜ் உறுப்பினர்களுக்கு தாயாகவும் சகோதரியாகவும் இருந்து வருகிறார். 90 வயதில் இனிமையாக குரலில் பாடக்கூடியவர் என்று குணராஜ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here