தனது தந்தை AEON தைப்பிங்கில் உள்ள ஹரோல்டிஸ் பேக்கரியில் இருந்து வாங்கிய ரொட்டியில் எலி இருந்ததாக முகநூலில் ஒரு வாடிக்கையாளர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு பதிவிட்டிருந்தார். மறுநாள் காலை, குற்றச்சாட்டுகள் வெளிவந்த 24 மணி நேரத்திற்குள், பேராக் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தொடர்புடைய பேக்கரியில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பேக்கரியில் எந்த உடல்நல அல்லது பாதுகாப்பு அபாயங்களும் இல்லை என்று கண்டறியப்பட்டது. மேலும் செயல்பாடுகள் இடையூறு இல்லாமல் தொடர அனுமதிக்கப்பட்டன.
குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகஸ்ட் 19 தேதியிட்ட கடிதத்தில், பேராக் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஃபைசுல் இட்ஸ்வான் பின் முஸ்தபா, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை உறுதிப்படுத்தினார். பொது சுகாதாரத்திற்கான உறுதியான அர்ப்பணிப்புக்காக பேராக் மாநில சுகாதாரத் துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதில் இன்றியமையாததாக இருந்த அவர்களின் உடனடி நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்.
மலேசிய சுகாதார அமைச்சகத்தால் (KKM) நிறுவப்பட்ட உணவுப் பாதுகாப்புத் தரங்களுடன் முழுமையாக இணங்கும் JAKIM-சான்றளிக்கப்பட்ட ஹலால் பேக்கரியாக, நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்.
இந்த புகார் குறித்து ஈப்போ நோர்ஹஷாம் வழக்கறிஞர் நிறுவனத்தை சேர்ந்த நோர்ஹஷாம் பின் ஹாஜி ஹசான் கூறுகையில் ஹரோல்டிஸ் பேக்கரியில் ரொட்டி வாங்கி 3 நாட்களுக்குப் பிறகு புகார்தாரர் சமூக ஊடகங்களில் புகாரினை வெளியிட்டதாகவும், அவர்கள் அந்த ரொட்டியை வாங்கி எங்கு வைத்தார்கள் என்று நமக்கு தெரியாது என்றும் கருத்துரைத்தார். இது ஹரோல்டிஸ் பேக்கரி மீது தேவையற்ற புகார் என்றும் புகார் அளிப்பதற்கு முன்பு சரியான முறையில் தகவலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் புகார்தாரர் அந்த சமூகப் பதிவு குறித்து வருத்தம் தெரிவித்ததாகவும் இந்த கூட்டத்திற்கு அவர் வருகைத் தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஹரோல்டிஸ் ஃபிரட் நிறுவனத்தின் இயக்குநரான முகமட் நூராஹாருல் 14 ஆண்டுகளாக ஹரோல்டிஸ் ஃபிரட் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் முதல் முறையாக இதுபோன்ற புகாரினை எதிர்நோக்கியதாகவும், எங்கள் நிறுவனம் இந்த புகாருக்கு உடனடியாகத் தீர்வுக்கான நினைத்ததாகவும் தெரிவித்தார். நாடாளவிய நிலையில் ஹரோல்டிஸ் பேக்கரி 67 கிளைகளுடன் இயங்கி வருவதாகவும் ஏறக்குறைய 700 முதல் 800 பணியாளர்கள் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். ஹரோல்டிஸ் பேக்கரி வழி இந்த பிரச்சினை எழவில்லை என்று பேராக் சுகாதாரத் துறைத் தெரிவித்திருந்தாலுன் இதுபோன்ற புகார் வராமல் இருக்க அதிக கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மைடின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடின் நான் அனைவரும் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்றும் அதே நேரம் தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்க தயங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஒரு பிரச்சினையை ஆராய்ந்து பார்க்காமல் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். எங்களின் கிளைகளில் ஹரோல்டிஸ் ஃபிரட் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் இது நாள் வரை இந்த நிறுவனத்தின் மீது இதுபோன்ற புகார்கள் எழுந்ததில்லை என்றும் அவர் கூறினார்.










