DBKL மெர்டேக்கா, மலேசியா தினத்திற்காக செப்., 17 வரை போக்குவரத்து அபராதங்களுக்கு தள்ளுபடி

கோலாலம்பூர் மாநகர (DBKL) தேசிய தினம்,  மலேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்து சிறப்பு போக்குவரத்து கூட்டு கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை செப்டம்பர் 17, 2025 வரை கிடைக்கும் என்று DBKL இன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்டேக்கா மாதம், மலேசிய தினத்துடன் இணைந்து சிறப்பு DBKL போக்குவரத்து கூட்டு கட்டணங்கள் செப்டம்பர் 17, 2025 வரை என்று DBKL பதிவில் தெரிவித்துள்ளது. Pay@kl மற்றும் PBTPay மூலமாகவோ அல்லது DBKL கவுண்டர்கள் மற்றும் Pos மலேசியா கிளைகளிலோ ஆன்லைனில் பணம் செலுத்தலாம் என்று DBKL மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here