பெர்சத்து கட்சி: மிகவும் உள்ளடக்கிய அரசியல் கட்சி!

கோலாலம்பூர்:

மலாய்காரர்ளுக்கும், பூமிபுத்திராக்களுக்கும் மட்டுமே சேவை செய்யும் கட்சி என்ற குற்றச்சாட்டை நிராகரித்த பெர்சத்து (Bersatu) கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஸய்னுடின் (Datuk Seri Hamzah Zainudin), மலேசியாவின் அரசியல் வரலாற்றில், பெர்சத்துதான் மிகவும் பண்முகத்தண்மை கொண்ட கட்சி என்று அறிவித்தார்.

பெர்சத்து கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேசிய ஹம்சா, சொங் ஃபட் ஃபுல் (Chong Fat Full) போன்ற, மலாய்காரர் அல்லாதத் துணைத் தலைவர்கள் சேர்க்கப்பட்டதே, கட்சியின் வெளிப்படைத்தன்மைக்கு, ஆதாரம் என்று சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, கட்சி, ஆரம்பத்தில், மலாய்கார், பூமிபுத்திராக்களை மையமாகக் கொண்டதாகக் கருதப்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டாலும், அது தவறான புரிதல் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, பெர்சத்து, எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும், பிரத்தியேகமானது அல்ல மாறாக, அனைவரையும் உள்ளடக்கியது.

இருப்பினும், முழு உறுப்பினர்களாகச் சேர்வது, மலாய்காரர், பூமிபுத்திராக்களுக்கு மட்டுமே, வழங்கப்படுகிறது, என்றும், வரம்புக்கு உட்பட்டது என்றும், அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here