கோலாலம்பூர், மார்ச் 11 :
இன்று மாலை 6 மணி வரை, நாட்டின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் 12.10 மணியளவில் வெளியிடப்பட்ட மெட்மலேசியாவின் எச்சரிக்கையின்படி, பேராக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநிலங்கள் மழை மற்றும் பலத்த காற்றை எதிர் நோக்கும் என அது தெரிவித்திருக்கிறது.
பேராக்கில், கோலக் கங்சார், கிந்தா, மத்திய பேராக், கம்பார், ஹிலிர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம் ஆகிய பகுதிகள் ஆகும், அதே சமயம் பகாங்கில் கேமரன் ஹைலேண்ட்ஸ் மற்றும் பேந்தோங் ஆகியவையும் அடங்கும்.
மேலும் சிலாங்கூரில், உலு சிலாங்கூர், கோம்பாக் பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் நெகிரி செம்பிலானில், ஜெலேபு மற்றும் சிரம்பானை உள்ளடக்கிய பகுதிகளிலும் இந்த வானிலை நிலவும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.








