ஜோகூர் பாரு,
74 வயது ஓய்வுபெற்ற தனியார் துறை பணியாளர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டத்தில் சிக்கி , தனது RM160,250 மதிப்புள்ள வாழ்க்கைச் சேமிப்பை இழந்துள்ளார்.
சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு, தற்போது வங்கி மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் சேர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
“மோசடி குழு ஒன்று, தமது வியாபார குழுவில் சேர்க்கும்படி வாட்ஸ்அப் மூலம் இவரை தொடர்பு கொண்டு, ஒரு வாரத்தில் 10% வரை வருமானம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தது. பாதிக்கப்பட்டவர் கடைசிவரை 18 முறையில் RM180,250 செலுத்தினார், ஆனால் உண்மையில் பெற்ற வருமானம் RM20,000 மட்டுமே” என ஜோகூர் பாரு (தெற்கு) போலீஸ் தலைவர் Raub Selamat தெரிவித்துள்ளார்.
போலீசார் பொதுமக்களை சமூக வலைதளம் மற்றும் இணைய செயலிகள் மூலம் வழங்கப்படும் “விரைவு மற்றும் உறுதி செய்யப்பட்ட வருமான வாய்ப்புகளில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.









