பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டுக் கூட்டம்

பிரெஸ்மாவின் 21ஆம் ஆண்டுக்கூட்டம் மாட்ரேட் மண்டபத்தில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் என்று பிரெஸ்மாவின் தலைமை செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் பின் ஷஹூல் ஹமீது இதனை கூறினார்.

பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கும் முன் உறுப்பினர்கள் தங்கள் சந்தாவை இணையம் அல்லது நேரடியாக அலுவலகத்தில் வந்து செலுத்தலாம். குறிப்பாக ஆண்டுக் கூட்டத்தின் போது நெரிசலை தவிர்க்க அவர்கள் சந்தாவை முன்கூட்டியே செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் தீர்மானத்திற்கான பாரங்கள் மின்னஞ்சல், வாட்சாப் வாயிலாக உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீர்மானம் கொண்டு வர எண்ணம் கொண்டவர்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அப்பாரங்களை திருப்பி அனுப்ப வேண்டும். ஆகவே, உறுப்பினர்கள் அனைவரும் திரளாக வந்து ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைமை செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் பின் ஷஹூல் ஹமீது கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here