பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு விவகாரம்: ‘யுமாணி’ அமைப்புக்கு எதிராகக் காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர்:

தேசிய மெட்ரிகுலேஷன் திட்டத்தை (national matriculation programme) ரத்து செய்து, பல்கலைக்கழக நுழைவுக்கு, முழுமையாக, எஸ்.டி.பி.எம்’-ஐ (*STPM*), சார்ந்து இருக்க, அரசாங்கத்தை, மலாயா பல்கலைக்கழகத்தின் புதிய இளைஞர் சங்கம்’ – UMANY வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர், டாங் யீ ஸெ (Tang Yi Ze) வெளியிட்ட, அறிக்கை தொடர்பாக, காவல்துறையினர், தொடர்புடைய தரப்பினரை, அழைப்பார்கள் என்று, காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் (Datuk Seri Mohd Khalid Ismail) கூறினார்.

சம்பந்தப்பட்ட சங்கத்தின் இந்த அறிக்கை, கல்வி அமைப்பு குறித்து, ஒரு எதிர்மறையானக் கருத்தை, உருவாக்கக்கூடும் என்றும், அதிருப்தியை, தூண்டக்கூடும் என்றும், அதிகாரிகள், எச்சரித்தனர்.

இது தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து, ஐந்து புகார்கள், பெறப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 505(b), தொடர்பு பல்லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ், விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையாக, அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here