பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

பாரீஸ்,கடந்த 2007 முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி. லிபியா முன்னாள் அதிபர் மம்மர் கடாபி. கடாபிக்கு ஆதரவாக பேச பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோஸி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக , சர்கோஸியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பாரிஸ் கோர்ட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு ஒரு லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து சர்கோஸி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி என கூறப்படுகிறது.

தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோஸி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூறியுள்ளார். நான் சிறையில் தூங்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், நான் சிறையில் தூங்குவேன். ஆனால், தலைகுனிய மாட்டேன் என சர்கோஸி தெரிவித்துள்ளார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசியல் நோக்கம் கொண்டவை என்று சர்கோஸி மறுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here