தீபாவளி என்றாலே நமக்கு முதலில் ஆடைகள், இனிப்பு பலகாரங்கள் எனலாம். நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக தீபாவளி திருநாளைக் கொண்டாடுகிறாமோ அதே மகிழ்ச்சியோடு வசதி குறைந்தவர்களும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மைடின் 500 வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கவிருப்பதாக மைடினின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா (டாக்டர்) ஹாஜி அமீர் அலி மைடின் தெரிவித்தார்.
மைடினில் அமர்களமாகத் தொடங்கியிருக்கும் தீபாவளி பசாரில் நியாயமான விலையில் தரமானப் பொருட்களை வாங்க உங்கள் குடும்பத்தாருடனும் உற்றார் உறவினர்களுடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுமாறும் அவர் வலியுறுத்தினார்.
தீபாவளியை அனைவரும் குறிப்பாக வசதி குறைந்தவர்களும் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மைடின் ஆண்டுத்தோறும் இந்த உதவிகளை வழங்கி வருவதாக அமீர் கூறினார். இன்று தொடங்கி தீபாவளி பசார் தீபாவளியின் 6 கிளைகளில் பாம்பே பசாரில் பொருட்களை வாங்கி மகிழலாம்.
தொடர்ந்து உரையாற்றிய நெகிரி செம்பிலான் சுற்றுலா, கலை, கலாச்சார EXCO நிக்கோல் டான் லீ கூன் மைடினின் சமூக சேவை மிகவும் பாராட்டுக்குரியது என்றும் இனப்பாகுபாடு இன்றி அனைவருக்கும் உதவிப்புரிந்து வருவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இந்த தொடங்கிய மைடினின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் மக்கள் ஓசையின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கோபாலகிருஷ்ணன் சண்முகமணி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








