ஈப்போ, தைப்பிங்கில் பல மணி நேரம் பெய்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுமார் 210 பேர் தற்காலிக முகாமி. பாதிக்கப்பட்டவர்கள் தாமான் கயா பல்நோக்கு மண்டபம், எஸ்கே சிம்பாங், எஸ்கே மாத்தாங், எஸ்கே மாத்தாங் குளுகோர் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) இரவு 8.30 மணியளவில் திடீர் வெள்ளம் தொடங்கியது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். மலேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, சனிக்கிழமை (அக். 4) மாலை உலு பேராக், கோல கங்சார், கிந்தா, கம்பார், பேராக் தெங்கா, கெரியன், லாரூட், மாத்தாங் செலாமா ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









