நவராத்திரி விழா 9 நாட்களுக்குக் கொண்டாடப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நவராத்திரி விழா நிறைவு பெற கால பைரவர் பூஜை அவசியம் என்பதனை நம்மில் எத்தனை பேர் அறிவர். வருடந்தோறும் அந்த பூஜை மிக விமர்சையாக பெட்டாலிங் எஸ்டேட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வருடந்தோறும் ஆலய அறங்காவலரான டத்தோ ஆனந்த கிருஷ்ணன், டத்தின் துளசி கிருஷ்ணன் குடும்பத்தார் ஏற்பாட்டில் கால பைரவர் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின்போது தேவாரம், பரத நாட்டியம், இசை கச்சேரி ஆகியவை வந்திருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
ஆலய அறங்காவலரான டத்தோ ஆனந்த கிருஷ்ணன் தமதுரையில் பெற்றோர் பிள்ளைகளை ஆலயத்திற்கு அழைத்து வந்து நமது வழிபாட்டு முறைகளையும் கலாச்சாரத்தையும் கற்றுதர வேண்டும் என்றார். நான் எவ்வளவு நவீன காலத்தில் இருந்தாலும் நமது பாரம்பரியமும் கலாச்சாரமும்தான் நம்மை முன்னெடுத்து செல்லும் என்பதனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.










