தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி விளக்கம்

சென்னை:

பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை காலை அவரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“இன்று காலை அப்பாவுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இதயக் குழாய்களில் எவ்வித அடைப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதய நிபுணர்கள் அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று உறுதி செய்துள்ளனர். ஆனால், இன்னும் ஆறு மணி நேரம் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருப்பார். எனவே, இந்நேரத்தில் அவரை யாரும் சந்திக்க வேண்டாம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here