கோலாலம்பூர்:
உயர்கல்வி அமைச்சின் (KPT) கீழுள்ள ஒரு முகவர் அமைப்பான தேசிய உயர்கல்வி நிதி வாரியம் (PTPTN), Simpan SSPN மூலமாக மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வலுப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Cabutan Prime Bonanza குலுக்கல் உட்பட பல்வேறு தொடர் ஊக்குவிப்பு முயற்சிகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.
மலேசியத் தலைமுறையினரின் கல்வி எதிர்காலத்திற்காக, தங்களின் முதன்மை Simpan SSPN Prime திட்டத்தைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் வைப்பீட்டாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக PTPTN இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த குலுக்கலில் 106 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த குலுக்கல் பிரச்சாரம், Simpan SSPN Prime வைப்பீட்டாளர்களுக்காக பிளாட்டினம் (Platinum), கோல்டு (Gold) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி 2026 ஜூலை 1 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும். மொத்தம் 106 வெற்றியாளர்களுக்கு கிட்டத்தட்ட RM500,000 மதிப்பிலான கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன.

பரிசு விவரங்கள் பின்வருமாறு:வெற்றியாளர் -பிளாட்டினம் பிரிவு (Kategori Platinum):
முதன்மை பரிசு (1 வெற்றியாளர்) – Jaecoo J7 2WD PHEV கார்.
இரண்டாவது பரிசு: (1வெற்றியாளர்) – RM50,000 ரொக்கம்.
மூன்றாவது பரிசு: (1வெற்றியாளர்) – RM30,000 ரொக்கம்.
ஆறுதல் பரிசு: 50 பேருக்கு தலா RM1,000 ரொக்கம்.
கோல்டு பிரிவு (Kategori Gold) முதல் பரிசு: (1 வெற்றியாளர்) – PROTON X50 Flagship. PHEV கார் (1 வெற்றியாளர்)Proton X50 Flagship கார்.
இரண்டாவது பரிசு (1வெற்றியாளர்) – RM30,000 ரொக்கம்.
மூன்றாவது பரிசு: (1 வெற்றியாளர்)- வெற்றியாளர்)RM10,000.
ஆறுதல் பரிசு தலா RM500 ரொக்கம் (50 வெற்றியாளர்கள்).
குலுக்கலில் பங்கேற்பது எப்படி?
இக்குலுக்கலில் பங்கேற்க, வைப்பீட்டாளர்கள் இக்காலக்கட்டத்தில் புதிய கணக்கைத் தொடங்க வேண்டும் அல்லது தங்களின் சேமிப்பை அதிகரிக்க வேண்டும். Simpan SSPN Prime கணக்கில் வைக்கப்படும் ஒவ்வொரு RM100 நிகர சேமிப்பிற்கும் (simpanan bersih) 10 குலுக்கல் வாய்ப்புகள் வழங்கப்படும்.அதிர்ஷ்டவசமாக, myPTPTN செயலி, சம்பளக் கழிப்பு (potongan gaji) அல்லது நேரடிப் பற்று (auto debit) மூலம் சேமிப்பவர்களுக்கு 20 இரட்டைக் குலுக்கல் வாய்ப்புகள் (cabutan berganda) கிடைக்கும்.
முக்கிய நிபந்தனை: வைப்பீட்டாளர்கள் தங்களின் கணக்கை செயலில் (active) வைத்திருக்க வேண்டும். அத்துடன், சேமிப்பு வைப்பு செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து 2026 நவம்பர் 1 முதல் 2027 ஜனவரி 31 வரையிலான தக்கவைப்புக் காலத்தில் (tempoh pengekalan) பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ (transfer) கூடாது.
PTPTN நிர்வாகத் தலைவர் இதுகுறித்து குறிப்பிடுகையில் ,”இந்த Prime Bonanza குலுக்கல் திட்டம், தங்களின் பிள்ளைகளின் கல்விச் சேமிப்பிற்கு Simpan SSPN Prime திட்டத்தை நம்பித் தேர்ந்தெடுத்த வைப்பீட்டாளர்களின். நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பாராட்டும் PTPTN-இன் தொடர் முயற்சியாகும் என்றார்.

இது வெறும் பரிசுகளை வழங்குவதோடு மட்டுமின்றி, பெற்றோரும் சமூகத்தினரும் தங்களின் பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுகளுக்காக ஆரம்பக்காலத்திலிருந்தே தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓர் ஊக்கியாகவும் அமையும்,” என்று அவர் கூறினார்.
முந்தைய வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு
இதே வேளையில், PTPTN WOW! Simpan SSPN Plus 2026 ‘ குலுக்கல் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. Simpan SSPN Baru Slay பிரச்சாரத்தையும் PTPTN முன்னெடுத்துள்ளது.
இப்போட்டிகளின் முதன்மை வெற்றியாளர்களையும் சிறப்பித்தது. WOW! Plus Siri 1 வெற்றியாளர் முதல் பரிசாக RM20,000 ரொக்கப் பரிசையும், Slay1 குலுக்கலின் வெற்றியாளர் Yamaha NVX 155 மோட்டார் சைக்கிளையும் வென்றனர்.
வெற்றியாளர்களின் இல்லத்திற்கே சென்று பரிசுகளை வழங்கும் நிகழ்வை PTPTN தலைமை நிர்வாக அதிகாரி அமாட் டாசுக்கி அப்துல் மஜிட்,(YBrs. Encik Ahmad Dasuki Abdul Majid) நிறைவு செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் சந்தைப்படுத்துதல், தொடர்பு பிரிவு மூத்த தலைமை நிர்வாகி புவான் வான் ஸாவியா வான் அபு பக்கார், PTPTN Negeri Sembilan மாநில இயக்குனர் புவான் யுஷானலிஸா பிந்தி ஹம்டான், PTPTN Wilayah Persekutuan Kuala Lumpur இயக்குனர் அமாட் ஷாரில் @ முஹம்மட் ஷாரிர் பின் கஸாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Simpan SSPN திட்டத்தின் நன்மைகள்: Simpan SSPN கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன:ஆண்டிற்கு RM8,000 வரை வருமான வரி விலக்கு (pelepasan taksiran cukai).வைப்பீட்டாளர்களுக்கான தக்காஃபுல் (Takaful) காப்பீட்டுப் பாதுகாப்பு. தகுதியுள்ள ஒரு குடும்பத்திற்கு RM10,000 வரை இலவச இணை மானியம் (Geran Sepadan). போட்டித்தன்மை வாய்ந்த லாப ஈவு. அரசாங்க உத்தரவாதம் மேலும் ஷரியா (Syariah) இணக்கத்தன்மை.மேலும், 2025 வரவுசெலவுத் திட்டத்தின் (Belanjawan 2025) படி, உயர்கல்வி நிறுவனங்களில் (IPT) பயிலும் மாணவர்களுக்கான ‘கெரான் பாடானான் இஹ்சான்’ (GAPAI) திட்டத்தின் கீழ், இணை மானியம் பெறும் தகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்போது மாத வருமானம் RM4,000 முதல் RM6,000 வரை உள்ள குடும்பங்களும் இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை இணை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.Simpan SSPN குறித்த கூடுதல் விவரங்களுக்கு, அதன் அதிகாரப்பூர்வ தளமான www.ptptn.gov.my பக்கத்தை நாடலாம் அல்லது எளிதான, விரைவான மேலும் பாதுகாப்பான சேவைகளுக்கு myPTPTN செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.






















