காதலன் திருமணமானவர் என்பதை அறிந்து காதலி செய்த செயல்

தனது காதலன்  சொந்த நாட்டில்  திருமணம் செய்து கொண்டதை அறிந்ததும் பொறாமைப்பட்டு அவரது பிறப்புறுப்பை வெட்டியதாகக் கூறப்படும் 34 வயது வங்கதேசப் பெண் கைது செய்யப்பட்டார்.

கேலாங் பாத்தா, கம்போங் லோகானில் தனது 33 வயது வங்கதேச நண்பர் தனது காதலியால் தாக்கப்பட்டதாக உள்ளூர் நபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, நேற்று காலை 10.45 மணிக்கு இந்த சம்பவம் பதிவாகியதாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

 பொறாமைதான் தாக்குதலுக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here