மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கோபிந்த் சிங் 25,000 ரிங்கிட் நன்கொடை: பிரதமர் 50,000 ரிங்கிட் தருவதாக வாக்குறுதி

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி கொண்டாடம் மிக விமரிசையாக நடந்தேறியது. தீபாவளி கொண்டாடத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சங்கத்திற்கு 25,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்தார்.

அதே வேளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 50,000 ரிங்கிட் தருவதாக தெரிவித்திருக்கிறார் என்ற நற்செய்தியை தீபாவளி விருந்து நிகழ்விற்கு வருகைப்புரிந்திருந்த 200 பேர் முன்னிலையில் தெரிவித்தார்.

­

இந்தாண்டு சங்கத்திற்கு கிடைத்திருக்கும் மொத்தம் 75,000 ரிங்கிட் நன்கொடை சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் தாம் நம்புவதாக கோபிந்த் சிங் நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும் விருந்திற்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். விருந்து நிகழ்ச்சியில் பாப்பாராய்டு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here