தீபாவளி விருந்தில் வெள்ளி சேலை, ரூ.17 கோடி மதிப்புள்ள பையுடன் வலம் வந்த நீதா அம்பானி

பிரபல தொழில் அதிபரும் இந்திய ஆடை வடிவமைப்பாளருமான மணிஷ் மல்கோத்ரா மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தீபாவளி விருந்து வைத்தார். இதில் நீதா அம்பானி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதா அம்பானி விலை உயர்ந்த வெள்ளி சேலை அணிந்து வந்திருந்தார். அவருடைய காதில் பெரிய மரகத காதணிகள் மற்றும் கையில் விலை உயர்ந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஒன்றை வைத்திருந்தார்.

சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்த விழாவில் நீதா அம்பானி அணிந்திருந்த சேலை மற்றும் கைப்பை அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்திருந்த சேலையில் இருந்த வெள்ளி ஜரிகை ஜொலித்தது. அவருடைய காதில் அணிந்திருந்த மரகத காதணி அதற்கு ஏற்றார் போல இருந்தது.

இதற்கு மேலாக அவர் வைத்திருந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஆடம்பரமாக ஜொலித்தது. அதன் விலை 2 மில்லியன், தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 17 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 200 ஆகும். இது போன்ற விலை உயர்ந்த பைகள் உலகில் 3 பேரிடம் மட்டுமே உள்ளது. அதில் நீதா அம்பானியும் ஒருவர். இந்த கைப்பையில் 3ஆயிரத்து 25 வைரக் கற்கள் உள்ளன. கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த பையில் வைர கற்கள் வரிசையாக அடுக்கி மிளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். சினிமா பிரபலங்களையும் மிஞ்சும் அளவில் வெள்ளி சீக்வின் சேலை மற்றும் வைர கற்களால் ஆன கைப்பையுடன் வலம் வந்த நீதா அம்பானி படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here