டெல்லியை சேர்ந்த நிகிதா (வயது 25). இவருக்கும் கான்பூரில் சிமெண்டு தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபர் மஹானாவுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
மஹானா லக்னோவில் செய்து வந்த தொழில் நஷ்டம் அடைந்துவிட்ட தால் அவருக்கு பணப்பிரச்சனை ஏற்பட்டது. அவர் நிகிதாவிடம் ரூ.15 லட்சம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். நிகிதாவின் மாமியாரும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தினார்.
இந்த நிலையில் தீபாவளி விருந்து ஒன்றில் நிகிதாவும், மஹானாவும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்த அவர்களிடம் மீண்டும் பணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திடீரென நிகிதா மயங்கி கீழே விழுந்தார்.
இந்த நேரத்தில் நிகிதாவின் சகோதரி முஸ்கன் யதார்த்தமாக அவருக்கு போன் செய்தார். நிகிதா மயக்கமடைந்து இருப்பது அவருக்கு தெரியவந்தது. அவர் நிகிதாவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி மஹானாவிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நிகிதா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் நிகிதா உயிரிழந்ததை அவரது தாயாரிடம் மஹானாவும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
தங்கள் மகள் இறந்த செய்தியை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தனர். வரதட்சணை கேட்டு தன் மகளை கொடுமைப்படுத்தி அடித்து கொன்றுவிட்டதாக நிகிதாவின் கணவர் மற்றும் மாமியார் அவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.