பாலேக் புலாவ் மலைப்பாதையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடர்ந்து சாலை மூடப்பட்டது

ஜார்ஜ் டவுன்: பாலேக் பூலாவ், ஜாலான் துன் சர்டான் பகுதியில் இன்று மாலை ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால், மலைப்பாதையை போக்குவரத்துக்கு அதிகாரிகள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மாலை 4.56 மணிக்கு நடந்த சம்பவத்தில், இடைவிடாத மழையைத் தொடர்ந்து ஒரு சிறிய வகுப்பறை அளவிலான பகுதியை உள்ளடக்கிய மண், பாறைகள், சரிந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் கண்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

நிலச்சரிவின் வீடியோவில், விழுந்த மரங்களுக்கு இடையில்  ஒரு கார் நூலிழியில்  தப்பிப்பதை போனதை காட்டுகிறது. எந்த வாகனங்களும் சிக்கவில்லை, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தீயணைப்புத் துறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய ஃபைஸ் ஹெல்மி, தனது குழுவினர் விழுந்த மரங்களை அகற்றி, அந்த இடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, பின்னர் பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறையிடம் மேலும் நடவடிக்கைக்காக ஒப்படைத்ததாக கூறினார். ஒரு அறிக்கையில், மாலை 5.50 மணிக்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கையாக சாலை மூடப்பட்டு உள்ளது.

மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து, டிஜிட்டல் குழுத் தலைவர் ஜைரில் கீர் ஜோஹாரி இந்த சம்பவத்தை ஒரு சரிவுப் பாதை சரிவு என்று விவரித்தார். மேலும் வாகன ஓட்டிகள் தற்போதைக்கு ஜாலான் துன் சர்தானைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here