நீண்டகால கருத்து வேறுபாடு வெட்டுக்கு வழிவகுத்தது

நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக, கிளந்தான், பாசீர் புத்தேயில் ஒரு நபரை வெட்டியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ஒரு ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாசீர் பூத்தே, சேரங் ருக்குவில் உள்ள கம்போங் கூலிமில் நேற்று மாலை 6.35 மணியளவில் பொதுமக்களில் ஒருவரால் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பாசீர் பூத்தே காவல்துறைத் தலைவர் ஜைசுல் ரிசால் ஜகாரியா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் காயமடைந்து சிகிச்சைக்காக தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும் ஒரு சந்தேக நபர் விரைவாக கைது செய்யப்பட்டார். ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here