மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… வைரலாகும் ஜாய் கிரிசில்டா பதிவு

தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.

தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா சமீபத்தில் புகார் அளித்திருந்தார். ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா ஆஜராகி புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கும் மணிக்கணக்கில் விளக்கம் அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதும், தனது புகாரை விசாரிக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். புகார் தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசல்டா இருவருக்கும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தனக்கு மாதா மாதம் ஆறரை லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுக்கு ரங்கராஜ் வழங்க வேண்டும் என்றும் ஜாய் கிரிஸில்டா தரப்பில் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகனின் பிறப்புச் சான்றிதழை வெளியிட்டு, தந்தை பெயர் மாதம்பட்டி ரங்கராஜ் என குறிப்பிட்டார்.

ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தில் ரங்கராஜ் ஒத்துக்கொண்டிருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம், சென்னை காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டிராகிராம் ஸ்டோரியில் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும் என்னுடைய குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here