“மலேசிய பொருட்கள் வாங்குங்கள்” என்ற பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கிய மைடின் பேராங்கடி

 மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (மைடின்), உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சகத்துடன் (KPDN) இணைந்து “மலேசிய பொருட்கள் வாங்குங்கள்” பிரச்சாரம் 2025யை தொடங்கியது.

“உள்ளூர் மீண்டும் பொருட்கள்” பிரச்சாரத்தைத் தொடங்குவதன் மூலம் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. இந்த வெளியீட்டு விழாவை உள்நாட்டு வர்த்த, வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர், செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜா புஸியா சாலே மைடின் சுபாங் ஜெயாவில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் நாம் அனைவரும் மலேசியப் பொருட்களை வாங்கி நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக உள்ளூர் சில்லறை வியாபாரிகளுக்கு எங்கள் துறை மிகப்பெரிய அளவில் ஆதரவினையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. உள்ளூர் வியாபாரிகளின் வளர்ச்சி அனைத்துலக ரீதியில் நம்மை மிளிர வைக்கும் என்றும் கருத்துரைத்தார்.

இந்த பிரச்சாரத்தில் நுகர்வோர் உள்ளூர் பொருட்களை வாங்க ஊக்குவிப்பதற்கும் சில்லறை சந்தையில் உள்ளூர் தொழில்முனைவோரின் நிலையை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு விளம்பரங்கள் சுவாரஸ்யமான செயல்பாடுகள் உள்ளன. உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக நிறுவனத்தின் வணிக முன்னுரிமைகளில் ஒரு பகுதியாக இருந்து வருவதாக மைடினின் நிர்வாக இயக்குனர் டத்தோ வீரா (டாக்டர்) ஹாஜி அமீர் அலி மைடின் கூறினார்.

 

வணிக அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து உள்ளூர் தொழில்முனைவோருக்கும் சம வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். தயாரிப்பின் தரம், வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் திறன் ஆகியவை முக்கியம். இந்த ஆண்டு உள்ளூர் தயாரிப்புகளுக்கான, குறிப்பாக SMEகள் மற்றும் PMKS விற்பனையில் 15% அதிகரிப்பை நாங்கள் மதிப்பிடுகிறோம் என்று அவர் கூறினார்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ‘உள்ளூர் பொருட்களுக்கான்’ விற்பனை திருவிழா 2025 நவம்பர் 20 முதல் 23 வரை MYDIN USJ இல் நடைபெறும். இதில் பல்வேறு உள்ளூர் தொழில்முனைவோர் பங்கேற்பார்கள். அவர்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோருக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்வார்கள். MYDIN நெட்வொர்க்கில் தங்கள் தயாரிப்புகளை வெற்றிகரமாக சந்தைப்படுத்திய புதிய உள்ளூர் சப்ளையர் கூட்டாளர்களை அங்கீகரிக்க 2025 உள்ளூர் தொழில்முனைவோர் பாராட்டுச் சான்றிதழையும் MYDIN வழங்கியது.

‘உள்ளூர் பொருட்கள் வாங்குவீர்’ பிரச்சாரம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மைடின் கிளைகளிலும் 31 டிசம்பர் 2025 வரை நடைபெறும். MYDIN மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பொதுமக்கள் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

நாங்கள் இடத்தை வழங்குகிறோம். ஆனால் தரமான பொருட்களை விற்பது வியாபாரிங்களின் ஆர்வத்தை பொறுத்தது. நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் உங்கள் வியாபாரத்தில் அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் பொருட்களை வாங்குவீர் கன்காட்சியில் 72 ஆண்டுகளாக மலேசியாவில் தயாரிக்கப்படும் ராஜா மசாலா பொருட்களும் விற்பனையில் இருக்கிறது. ஜோகூரில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கிய இவர்களின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த கார்த்திக் கூறுகையில் காலத்திற்கேற்ப சுவையிலும் தரத்திலும் பல மாற்றங்களை செய்திருப்பதாகவும் மசாலா பொருட்கள் தயாரிப்புகள் முழுவதும் தானியங்கி முறையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here