பெண்களுக்கு பிடித்த பொருட்களில் தங்க நகைகள் முதலிடத்தில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நகைகளிலும் காலத்திற்க்கேற்ப டிசைன்களிலும் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மலபார் கோல்ட் – டைமன் இன்றைய தினம் நவீன காலத்திகேற்ப மிக நுட்ப வேலைப்பாடுகள் நிறைந்த நகைகளையும் அதே வேளை பாரம்பரிய நகைகளையும் விற்பனை செய்து வருகிறது.
14 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் மலபார் கோல்ட் -டைமன் மலேசியாவில் தனது முதல் கிளையை 2015ஆம் ஆண்டு மஸ்ஜிட் இந்தியாவில் தொடங்கியது. தற்பொழுது தங்களது 9ஆவது கிளையை ஜாலான் மாரூப், பங்சாரில் தொடங்கி இருக்கிறது.
இந்த திறப்பு விழாவினை முன்னிட்டு பழைய 916 தங்க நகைகள் இன்றைய விலைக்கு எடுத்துக் கொண்டு புதிய வடிவிலான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கி 2026 ஜனவரி 7ஆம் தேதி வரை வைர நகைகளை வாங்குபவர்களுக்கு உடனடி பற்றுச் சீட்டும் சிறப்பு விலையும் வழங்கப்படும் என்று விற்பனை அதிகாரி மதன் ராஜ் தெரிவித்தார்.
பங்சாரில் திறப்பு விழா கண்டிருக்கும் மலபார் கோல்ட் -டைமன் நகைக்கடை மற்ற கடைகளை விட மாறுபட்ட வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கம் – வைர நகைகளை வாங்க மலபாருக்கு வந்து மகிழ்ச்சியாக வாங்கி செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.











