மும்பை விமான நிலையத்தில் ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல் – 20 பேர் கைது

மும்பை,மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு போதைப்பொருள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ. 53 கோடி ஆகும். இந்த கடத்தலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here