கோலாலம்பூர்:
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பின் படி, இந்த வாரத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பெட்ரோல் ரோன் 97, உதவித் தொகை வழங்கப்படாத ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 2 காசு குறைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் புதிய விலைகள் (27 நவம்பர் முதல் 3 டிசம்பர் 2025 வரை):
பெட்ரோல் ரோன் 97:
பழைய விலை – RM 3.28
புதிய விலை – RM 3.26 (2 காசு குறைவு)
உதவித் தொகை வழங்கப்படாத பெட்ரோல் ரோன் 95:
பழைய விலை – RM 2.65
புதிய விலை – RM 2.63 (2 காசு குறைவு)
டீசல் (தீபகற்ப மலேசியா):
பழைய விலை – RM 3.10
புதிய விலை – RM 3.08 (2 காசு குறைவு)
இதே நேரத்தில், மானியம் வழங்கப்படும் பெட்ரோல் ரோன் 95 விலையில் மாற்றமில்லை என்றும், அது முந்தையதைப் போலவே லிட்டருக்கு RM 1.99 என நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படுவதாகவும், எரிபொருள் மானிய முறையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.




















