ஏஞ்சர்ஸ்: பிரான்சில் பெண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ராஹிமோவா, சக வீராங்கனை கோர்னீவாவை எதிர்கொண்டார்.
இதில் ராஹிமோவா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் உக்ரைனின் வெரோனிகா, ரஷ்யாவின் சரயீவாவை 6-1, 6-1 என வீழ்த்தினார்.









