ஷம்சுல் இஸ்கண்டாருக்கு லஞ்சம் வழங்கியதாக தொழிலதிபர் டெய் மீது மற்றொரு குற்றச்சாட்டு

ஷா ஆலம், தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் இன்று மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, சபாவில் கனிம ஆய்வு உரிமத்திற்கான ஒப்புதலைப் பெற உதவுவதற்காக பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினுக்கு 64,924 ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

37 வயதான ஆல்பர்ட் டெய் ஜியான் சியிங், நீதிபதி டத்தோ முகமட் நசீர் நோர்டின் முன் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என்று கூறி விசாரணைக் கோரினார். “(குற்றச்சாட்டை) நான் புரிந்துகொள்கிறேன். நான் குற்றமற்றவன் என்று கூறி விசாரணையை கோருகிறேன் என்றார் டெய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here