உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷியா டிரோன் தாக்குதல் – 6 பேர் படுகாயம்

கீவ்,உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நகரில் உள்ள எரிசக்தி கட்டமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதன் விளைவாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டன. தொடர்ந்து குளிர்காலம் முழுவதும் மின்தடை தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here