கோல சிலாங்கூரில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து

கோல சிலாங்கூர், பண்டார் புன்ஞாக் ஆலமில் உள்ள ஆலம் ஜெயா தொழில் பூங்காவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று அதிகாலை  தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பெஸ்தாரி ஜெயா, காப்பார், கோத்தா அங்கெரிக், ராவாங், பத்து அராங், பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு, மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், மதியம் 1.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு காலை 11.53 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் வந்தது. இதையடுத்து தீயில் இருந்து அடர்த்தியான புகை பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் தெரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here