டத்தோ கருணாநிதிக்குப் பதவி உயர்வு

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அதன் அதிகாரிகளின் பதவி உயர்வை அறிவித்தது. பொதுமக்களுக்கு ஆக்கப்பூர்வமான, நனிச்சிறந்த சேவைகளை வழங்குவதற்கு தலைமைத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்தப் பதவி உயர்வு அமைகிறது.

மிகச்சிறந்த செயலாக்கம், வலுவான ஈடுபாடு, உயர்நெறி ஆகியவற்றைத் தங்கள் கடமைகளில் காட்டியிருக்கும் அதிகாரிகளின் நியமனங்களும் பதவி உயர்வுகளும் அமைந்திருக்கின்றன. அமைந்திருக்கின்றன. மலேசிய ஊழல் தடுப்பு அகாடமியின் முன்னாள் சீனியர் இயக்குநர் டத்தோ முகமட் ஹஃபாஸ் நஸார் எம்ஏசிசி புலன் விசாரணைப் பிரிவின் சீனியர் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதேசமயத்தில் பினாங்கு மாநில எம்ஏசிசி இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த டத்தோ கருணாநிதி சுப்பையா மலேசிய ஊழல் தடுப்பு அகாடமினியின் சீனியர் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இந்த நியமனங்கள், பதவி உயர்வுகள் 2026 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியிடம் இருந்து இவர்கள் தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். எம்ஏசிசி அமைப்புக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு ஓர் அங்கீகாரமாக இந்தப் பதவி உயர்வும் நியமனமும் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here