ஈப்போ,கம்பாரில் உள்ள ஜாலான் இட்ரிஸ், கம்போங் மசூதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல்வேறு பொருட்களை விற்பனை செய்த மொத்தம் 54 பழைய பஜார் அலகுகள் எரிந்து நாசமாகின.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல் உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா கூறுகையில், சம்பவம் குறித்து அதிகாலை 3.10 மணிக்கு துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கம்பார், கோப்பெங், தாப்பா தீயணைப்பு, மீட்பு நிலையங்களில் இருந்து பணியாளர்களை அனுப்பியதாகவும் கூறினார்.
54 பழைய பஜார் அலகுகளும் அழிந்தன். எந்த பொருட்களையும் காப்பாற்ற முடியவில்லை. அந்த நேரத்தில் துணிக்கடைகள், மளிகைக் கடைகள், உணவுக் கடைகள் உட்பட 10 அலகுகள் மட்டுமே செயல்பட்டு வந்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கட்டிடம் வகுப்பு சி கட்டுமானமாக வகைப்படுத்தப்பட்ட ஒரு பழைய ஒற்றை மாடி மர அமைப்பாகும். இது 45 அடிக்கு 110 அடி அளவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சேதத்தின் அளவு 100 விழுக்காடு என மதிப்பிடப்பட்டுள்ளது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.








