சாலை விபத்தில் மூதாட்டி பலி: ஓட்டுநர் மது அருந்தி விட்டு வாகனமோட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது

பினாங்கு, தஞ்சங் டோகோங் ஜாலான் லெம்பா பெர்மாய் என்ற இடத்தில் நேற்று இரவு வெளிநாட்டு பிரஜை ஒருவர் ஓட்டி வந்த கார் மோதியதில் மூத்த குடிமகன் ஒருவர் உயிரிழந்தார். மவுண்ட் எர்ஸ்கைனில் இருந்து தஞ்சோங் புங்காவுக்குச் சென்று கொண்டிருந்த   வாகனத்தின் ஓட்டுநர், இரவு 11.30 மணியளவில் சாலையைக் கடக்கும்போது 67 வயது பெண் மீது மோதியதாக தீமூர் லாவூட் காவல்துறைத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.

சம்பவம் குறித்து காவல்துறைக்கு இரவு 11.40 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அந்தப் பெண்ணின் மரணம் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 51 வயது எஸ்யூவி ஓட்டுநர், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தி வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1) இன் கீழ் விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்படுவார் என்றும் ரோசாக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here