மோசடி நிறுவனங்கள் ஜாக்கிரதை: மேலும் 10 நிறுவனங்களைப் பட்டியலில் சேர்த்தது மலேசியக் காவல்துறை!

கோலாலம்பூர்:

தேசிய காவல்துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID), பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் செயல்படும் மேலும் 10 நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றை அதன் ‘செமாக்முலே’ (Semakmule) கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், பொதுமக்கள் அளித்த ஏராளமான புகார்களின் அடிப்படையில் பின்வரும் நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன:

  1. CVC Grow Star Sdn Bhd
  2. CVC Group Sdn Bhd
  3. JMC M Trading Venture
  4. JMC Asia Top Solution
  5. KGI HK Sdn Bhd
  6. Greenvale Trading Sdn Bhd
  7. Titan Union Trading Sdn Bhd
  8. Brightglobal Sdn Bhd
  9. RXM IGlobal Solution
  10. Apek Express Servicess (M) Sdn Bhd

இதுகுறித்து புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஷ்டி முகமட் ஈசா கூறுகையில், மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தில் (SSM) நிறுவனத்தைப் பதிவு செய்தல் அல்லது மூன்றாம் நபர்களுக்காக வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற ‘எளிதான வேலை’ (Easy work) ஆஃபர்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.

ஏனெனில் மோசடி கும்பல்கள் இத்தகைய பெயர்களைத் தங்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு மறைப்பாகப் பயன்படுத்துகின்றன.

ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் பணப் பரிமாற்றம் செய்யும் முன், அந்த நிறுவனத்தின் பெயரையோ அல்லது வங்கிக் கணக்கையோ ‘செமாக்முலே’ இணையதளத்தில் சரிபார்க்கவும். அங்கு எச்சரிக்கை காட்டப்பட்டால், அந்த நிறுவனம் மோசடியில் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்கள் https://semakmule.rmp.gov.my/ என்ற இணையதளத்திற்குச் சென்று, சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்கு எண்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்களை உள்ளிட்டு அவை கருப்புப் பட்டியலில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here