அனைத்துலக பிராணா வைலட் ஹீலிங் மையத்தில் பொங்கல் கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அனைத்துலக பிராணா வைலட் ஹீலிங்  மையத்தின் ஏற்பாட்டில்  பொங்கல் நிகழ்வு  மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அதன் மையத்தில் நிருவனர் மாஸ்டர் டாக்டர் சிவா பழனி தலைமையில் கிராமபுர பாரம்பரிய பாணியில் பெரிய பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

இதில் தமிழ்நாடு மட்டும் இன்றி மலேசியா ,சிங்கப்பூர், அமெரிக்கா,இன்னும் பல நாடுகளை சார்ந்த மக்கள் கலந்துக்கொண்டு இந்த கிராமபுர பொங்கல் நிகழ்வை கண்டு இரசித்தனர் .பொங்கல் பொங்கும் போது கிராமபுர பாணியில் பெங்கல் கொலவை வைத்தது வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழர்களை கவர்ந்தது என்பது குறிப்பிட்டதக்கது.

சுமார் 69 நாடுகளில் இந்த பிராணா வைலட் ஹீலிங் மையம் இயங்கி வருவதாகவும் பல நிலைகளில் கஷ்டப்படும் மக்களுக்கு இலவசமாக ஆன்மிக பயிற்சிகளை நடத்தி வருவதாகவும் பிராணா வைலட் ஹீலிங் மையத்தின் நிறுவனர் மாஸ்டர் டாக்டர் சிவா பழனி மக்கள் ஓசையிடம் தெரிவித்தார். தமிழ் நாட்டில் பெரும்பாக்கம் கிராமத்தில் அனைத்துலக பிராணா வைலட் ஹீலிங் மைய கட்டிடம் கட்டப்பட்டு இராண்டாம் ஆண்டாக பொங்கல் நிகழ்வு கொண்டாடம்படுகிறது என அவர் கூறினார்.

பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாளாகும். சூரியன், மழை, நிலம் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. குடும்பத்தினர் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்து, புதிய ஆடைகள் அணிந்து, இனிப்பு பகிர்ந்து உறவுகளை வலுப்படுத்தும் விழாவாகும். இயற்கையுடன் இணைந்து வாழும் தமிழர் பண்பாட்டை எடுத்துரைக்கும் முக்கியமான பண்டிகை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதாக மாஸ்டர் டாக்டர் சிவா பழனி தெரிவித்தார்.

எஸ்.லிங்கேஸ்வரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here