கேரளா: வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரியில் வெடிமருந்து – அதிர்ச்சி சம்பவம்

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில் வெங்காயம் ஏற்றிச்செல்லும் லாரியில் வெடிமருந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரி நின்றுகொண்டிருந்தது.

இதையடுத்து, அந்த லாரியில் இருந்த வெங்காய மூட்டைகளை இறக்கிவிட்டு அதில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் வெடிமருத்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 10 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், ஒயர்கள், டெடனேட்டர்கள், வெடிமருந்து உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர். சட்டவிரோத சுரங்கத்தில் பயன்படுத்த இந்த வெடிமருத்து கடத்தி வரப்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here