டிபிகேஎல்-இன் ஒருங்கிணைப்பட்ட மையத்தின் இணையபக்கம் உருமாற்றம் -ஹன்னா இயோ

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (டிபிகேஎல்) ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தின் இணையபக்கம் இன்று முதல் பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார். குடியிருப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள மேம்பாடுகள், உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அதன் அனைத்து ஒப்புதல்கள் பற்றிய தகவல்களையும் பெற அனுமதிப்பதே டிபிகேஎல்-இன் நடவடிக்கையாகும்.

இந்தத் தகவலுக்கான அணுகலை வழங்குவதன் மூலம், திட்டமிடல், மேம்பாட்டுச் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதே டிபிகேஎல்-இன் நோக்கமாகும், அதே நேரத்தில் அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளும் ஒழுங்கான முறையில், விதிமுறைகளுக்கு இணங்க பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது.

 

நகர்ப்புறத் திட்டமிடலில் இந்த திறந்த அணுகுமுறை நீண்ட காலமாக வளர்ந்த நாடுகளில் ஒரு நிலையான நடைமுறையாக இருந்து வருகிறது. அங்கு அடிப்படை திட்டமிடல் தகவல்களை அணுகுவது ரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல்களுக்குப் பதிலாக பொது உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது என்று ஹன்னா இயோ கூறினார். நில உரிமையாளர்கள், விண்ணப்பதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ரகசியமற்ற, பொருத்தமான திட்டமிடல் தகவல்கள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்குக் காட்டப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

விரிவான கட்டடத் திட்டங்கள், நில உரிமையாளரின் தனியுரிமைகளை உள்ளடக்கிய ஆவணங்கள் போன்ற தனிப்பட்ட, உணர்திறன் வாய்ந்த தகவல்கள் இன்னும் பாதுகாக்கப்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட மேம்பாட்டு ஆணைகளில் மாநகர் மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் போன்ற கூடுதல் அணுகலை இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here