சாலை விபத்தில் உயிரிழந்த சரஸ்பதி, சரளா தேவி

ஈப்போ: பத்து கஜாவில் உள்ள கம்போங் பத்து 1 அருகே ஜாலான் தஞ்சோங் துவாலாங்கில் நான்கு சக்கர வாகனம் மோதியதில் காரில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறுகையில், பாதிக்கப்பட்ட ஜி. சரஸ்பதி 65, மற்றும் எஸ்.ஆர். சரளா தேவி, 34, ஆகியோர் திங்கள்கிழமை (பிப்ரவரி 9) இரவு 9.45 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். காரின் முன் இருக்கைகளில் சிக்கிய நிலையில் இருவரையும் மீட்டனர். அடுத்த நடவடிக்கைக்காக அவர்களின் உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன  என்று அவர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here