கோலாலம்பூர்:
இன்று பிப். 19 முதல் பிப். 25, 2026 வரையான ஒரு வார காலப்பகுதியில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக RON97 பெட்ரோல் ஒரு லிட்டர் RM3.10 ஆகவும், RON95 (மானியமில்லாத பெட்ரோல்) ஒரு லிட்டர் RM2.54 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
அதேநேரம் தீபகற்ப மலேசியாவில் RON95 (மானிய விலை பெட்ரோல்)ஒரு லிட்டர் RM2.99 ஆகவும்,
அதே நேரம் சபா, சரவாக் மற்றும் லாபுவாநில் ஒரு லிட்டர் RM2.15 என்ற சிலையிலும் விற்கப்படும் என்றும், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அவ்வப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.




















