முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்

லண்டன்,வழக்கமாக நாம் துருதுருவென அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை பார்த்தால் போதும், நமக்கு அவர்களை அழைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், அப்படி முத்தம் கொடுத்ததால் ஒரு குழந்தைக்கு கண் பார்வையே பறிபோய் இருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் மிச்சல் சாய்மின் 2 வயது குழந்தையான ஜுவா-க்குதான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், இந்த குழந்தைக்கு கண் தொற்று நோய் (Eye Infection) ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது பெற்றோர்கள், குழந்தைக்கு ஆண்டி பயோடிக் ட்ராப்ஸை கண்ணில் விட்டிருக்கின்றனர். ஆனால், அது பலனளிக்காமல் போயிருக்கிறது. இதையடுத்து, குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு HSV எனப்படும், Herpes Simplex Virus (அக்கி) வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இதை, தன்னிடம் டாக்டர்கள் கூறிய போது தன்னை டாக்டர்கள் ஏப்ரல் ஃபூல் செய்வதாக நினைத்ததாக, குழந்தையின் 36 வயது தாய் மிச்சேலி கூறியிருக்கிறார். டாக்டர்கள் தன்னிடம், “குழந்தையின் கண்ணில் fever blister எனப்படும் வாய்ப்புண் வளர்வதாக தெரிவித்திருக்கின்றனர். காரணம், வாயில் வரக்கூடிய இந்த புண், கண்களில் வளர்வது எப்படி என்பது தனக்கு தெரியவில்லை என்று அந்த தாய் கூறி இருக்கிறார்.

டாக்டர்கள், அந்த குழந்தையின் கருவிழியில் வளர்ந்த Fever Blister-ஐ ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதனால், பறிபோகும் நிலையில் இருந்த குழந்தையின் கண்ணில் இருந்த தொற்றை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் இருவரும் குழந்தையின் இன்னொரு கண்ணுக்கோ அல்லது மூளைக்கோ அந்த நோய் பரவி விடுமோ என்று பயந்திருக்கின்றனர்.

ரொம்பவும் தாமதமாக அந்த தொற்றை கண்டு பிடித்ததால், குழந்தைக்கு ஒரு கண் முழுவதும் அந்த தொற்று பரவி இருக்கிறது. இந்த நோய் வந்ததால், மூளைக்கு அந்த கண் குறித்த சிக்னல் அனுப்பப்படுவதில்லை. இதனால், கண் பார்வையை பாதுகாக்கும் ஜெல், வறட்சி பெற்றிருக்கிறது. இதையடுத்து, குழந்தையின் கண்கள் பாதிப்படைய ஆரம்பித்துள்ளன. அவரது கண்ணில் 4 மில்லி மீட்டருக்கு ஒரு ஓட்டையும் உருவாகி இருக்கிறது. இதனால், அடிக்கடி இன்ஃபெக்‌ஷன் வர ஆரம்பித்திருக்கிறது. இதனால், முழு கண்ணையும் இழக்கும் அபாயமும் அந்த குழந்தைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் விசாரித்த போது, Herpes வாய்ப்புண் தொற்று இருக்கும் யாரோ ஒருவர் குழந்தைக்கு முத்தமிட்டிருப்பதால் இது ஏற்பட்டதாக கூறியிருக்கின்றனர்.

குழந்தையின் தாய், இப்படி ஒரு முத்தத்தால், குழந்தைக்கு கண் பார்வை பறிபோகும் என்று நினைக்கவில்லை என்றும், உங்கள் நண்பர்கள், உறவினர்கள், நீங்களாகவே இருந்தாலும் கூட குழந்தைக்கு இப்படி ஆபத்தாக முத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தால், பெற்றோர் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here