பக்தர்கள் புடைசூழ கம்போங் தாசேக் பெர்மாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேகம்

‏கல்வி எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு சமய வழிபாட்டையும் ஆலய வழிப்பாட்டையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல ஆலயங்களில் சமய கல்வி கற்று தரப்படுகிறது.  அந்த ஆலயங்களின் சிறப்பு குறித்து அறிய வேண்டும் என்ற நோக்கில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் பக்தர்கள் புடைசூழ கம்போங் தாசேக் பெர்மாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தேறியது. ஆலய கும்பாபிஷேகம் குறித்து ஆலயத் தலைவர் விக்னேஸ்வஎரன் அன்பழகன் கூறுகையில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் முதல் கும்பாபிஷேகம் இது என்றார்.

ஆலயங்கள் வழிபாட்டு தளமாக மட்டுமல்லாமல் சமயத்தை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்  கம்போங் தாசேக் பெர்மாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் செயல்பட்டு வருவதாகவும் அதே வேளை கும்பாபிஷேகம் மிக முக்கியம் என்ற நோக்கில் ஆலய செயலாளர் சுகுந்தன் செல்வா உள்ளிட்ட ஆலய செயலவை  உறுப்பினர்களின் ஆதரவில் முதல் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது என்றும் ஆலயத் திருப்பணி கும்பாபிஷேகம் உள்ளிட்டவைகளுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுளங்களுக்கும் இவ்வேளையில் நன்றி மலர்கள் உரித்தாகட்டும் என்றார் விக்னேஸ்வரன் அன்பழகன். பக்தர்களுக்கு சிற்றுண்டியும், மதிய  உணவும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here