ருத்ரா தேவி சமாஜத்தின் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிசூலநாதருக்கு திருக்கும்பாபிஷேகம்

கம்போங் காசிப்பிள்ளை ருத்ரா தேவி சமாஜத்தில் வரும் 8.3.26 ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 தொடங்கி 9.15 மணிக்குள் அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிசூலநாதர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிவஶ்ரீ அ.ப.முத்துகுமார சிவச்சாரியார் தலைமையில் திருக்கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மெய்யன்பர்கள் தவறாமல் மறவாமல் கும்பாபிஷேகத்தில் கலந்து எம்பெருமானின் அருளை பெய்யுற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6.3.26 மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி 3 நாட்கள் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து 8ஆம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறும். கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ருத்ரா தேவி சமாஜம் தற்பொழுது சொந்த கட்டடத்தில் சைவ சித்தார்ந்த முறையில் பூஜைகள், பஜன்கள் நடைபெற்று வருவதாக முத்துகுமார சிவச்சாரியார் தெரிவித்தார். இந்த கட்டடத்திற்கு வந்து 16ஆண்டுகள் ஆகின்றன. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்ற ஆகம விதிப்படி தற்பொழுது ருத்ரா தேவி சமாஜத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

நமது சமாஜம் சித்ர முத்து அடிகளாரும் அவரின் குருவான ஜகந்நாத சுவாமி அருளாலும் செவ்வனே செயல்பட்டு வருகிறது. அவர்களின் ஆசியாலும் நன்கொடையாளர்களின் ஆதரவினாலும் திருக்கும்பாபிஷேகம் சிறப்பான நடைபெறவிருக்கிறது.  நிதி உதவி வழங்க விரும்பும் அன்பர்கள் 019-3295455 திருமதி சாந்தி சிவாவை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here