இந்திய லாரி ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் சிக்கிய சிறுமி; அவைக்கு அழைத்து பாராட்டிய டிரம்ப்

நியூயார்க்அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் இன்று கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, தலிலா கோல்மேன் என்ற சிறுமியை பற்றி குறிப்பிட்டார்.

2024-ம் ஆண்டில் அப்போது 5 வயது இருந்தபோது, சாலை விபத்தில் சிக்கிய அந்த சிறுமி அதன்பின்னர் சாப்பிடவோ, பேசவோ மற்றும் எழுந்து நடக்கவோ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் என டிரம்ப் கூறினார். 6 மாத சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் பெற்று இன்று நம்முன் அமர்ந்திருக்கிறார் என கூறினார். இதனை தொடர்ந்து அவையில் இருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்து தலிலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, பிரதாப் சிங் என்ற இந்தியர் 18 சக்கரங்களை கொண்ட லாரி ஒன்றை விரைவாக ஓட்டி, சாலை விதிகளை மீறி செயல்பட்டு விபத்து ஏற்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனை குறிப்பிட்டு டிரம்ப் பேசினார்.

அவர் கூறும்போது, கடந்த அமெரிக்க அரசில் இதுபோன்ற சட்டவிரோத வேற்று கிரகவாசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் அளிக்கப்பட்டு உள்ளது. சாலையின் விதிகளோ, திசை, வேகம், ஆபத்து அல்லது இடம் பற்றிய அடிப்படை விசயங்களோ, ஆங்கிலம் பேசவும், படிக்கவும் தெரியாத நபர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

இனி இதுபோன்ற சட்டவிரோத வேற்றுகிரகவாசிகளுக்கு வர்த்தக ஓட்டுநர் உரிமம் வழங்க தடை விதிக்கும் வகையிலான தலிலா சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

அதற்கு அவையில் பலத்த கரவொலி எழுந்தது. அனைவரும் எழுந்து நின்று சிறுமிக்கும், அவருடைய வளர்ப்பு தந்தைக்கும் ஆதரவாக கைதட்டல் அளித்தனர். இந்த விபத்தில் பல வாகனங்கள் சிக்கி கொண்டதுடன், பலர் காயமடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here